துத்திச்செடி
துத்திச்செடியில் உள்ள பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இவை இரத்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கி நெஞ்சுக்கு இதம் தரும்.
மருத்துவக்குணங்கள்🌿
ஆண்மை பெருகும்:
துத்திப்பூக்களை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ரத்தவாந்தி, ரத்தபேதி, சளியில் இரத்தம், சிறுநீரில் இரத்தம் ஆகியவற்றை குணமாக்கும்.
மேலும் ஆண்மையை பெருக்கும்.
ஆஸ்துமாநோய் குணமாக:
துத்திப்பூக்களை காம்பு நீக்கி நிழலில் உலர்த்தி சூரணம் தயார் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் சமஅளவு சர்க்கரை சேர்த்து அரைதேக்கரண்டி அளவு சூரணத்தை காலை, மாலை பாலில் கலந்து பருகினால் ஆஸ்துமா நோய் குணமாகும்.
காசம் என்ற எலும்புருக்கி நோய் குணமாகும்.
மூலநோய் குணமாக:
ஒரு கைப்பிடியளவு துத்திப்பூவை பசும்பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் பருகி வந்தால் மூலநோய் குணமாகும்.
ரத்தவாந்தி குணமாக:
அரைக் கைப்பிடியளவு துத்திப்பூக்களை ஒரு சட்டியில் எடுத்துக்கொண்டு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதனை இறக்கி வடிகட்டி நான்கு மணிக்கு ஒருமுறை அரை டம்ளர் வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி நிற்கும்.
இத்தகைய நன்மைகள் வாய்ந்த இந்தப்பூக்களை நாம் நம் அன்றாட உணவுடன் கலந்து உண்போம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.

No comments:
Post a Comment