Friday, December 26, 2014

அத்திப்பழத்தின் பலன்கள்



அத்திப்பழத்தின் பலன்கள் :-

++++++++++++++++++++++++

அத்திப் பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திப் பழங்கள் 6-8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி எனவும், நாட்டு அத்தி எனவும் தாவரவியலில் திகழ்கின்றது.

அதிசயமாக கிடைக்கும் அத்திப்பழம் பல்வேறு மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளது. சீசனில் மட்டுமே கிடைக்கும் இந்த பழத்தை உண்பதன் மூலம் உடல் சுறுசுறுப்படைகிறது. இதில் சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரண்டு வகை உண்டு. அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும், இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Antioxidents உள்ளன.

பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:

அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம்-200 மி.கி,அதிக நார்ச்சத்து, புரதம்-4 கிராம்,இரும்பு-4 மி.கி, வைட்டமின்-100 ஐ.யு, தயாமின்-0.10 மி.கி,வைட்டமின் பி 12, கலோரி அளவு-260 ஆகியவை 100 கிராம் அத்திப் பழத்தில் அடங்கியவையாகும். உலர்ந்த அத்திப் பழங்களில் இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும்.நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுகிறது.அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது

1.)அத்திப் பழம் அதிக போஷாக்கு அளிக்கக் கூடியது அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும்.

2.)உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.

3.)அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.

4.) அத்திப் பழம் சீரண சக்தியை தூண்டும். தினசரி சாப்பிட்டு வர ஆரோக்கியம் பெருகும். உடல் உஷ்ணத்தை தணிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற உஷ்ண உபாதைகள் அகலும்.

5.) அத்திப் பழம் உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது. பெண்களின் வெள்ளை படுதலையும் போக்கிடும்.

6.)நாட்டு அத்தியின் பாலை, மரு, மூலம் போன்றவற்றில் போட்டு வர அவை சுருங்கி விடும். உபாதைகள் குறையும்.

7.) அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும் இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.

8.)போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.

9.)தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

10.)தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

**நீர்வியாதிக்குச் செந்தூர வகைகளில் ஒரு வகையுடன் அல்லது ஒன்றோடொன்று கூட்டி நெய்யில் அனுபானம் செய்துக் கொடுத்தப் பிறகு கொஞ்சம் வேகவைத்துப் பிழிந்தெடுத்த அத்திப்பழச் சாறு கால் அல்லது அரை அவுன்ஸ் கொடுத்தால் உட்சூடு,அதிகமாக சிறுநீர் போதல், தாகம் ஆகியவை நீங்கும்.

பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள்.

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம்.

பசுமை காப்பாளர்கள் ஆளுக்கு ஒரு மரம் நடுவோம்,
மழை பெறுவோம்.,மகிழ்ச்சியாக வாழ்வோம்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் உறவினகள் அனைவரிடமும் தெரியப்படுத்துங்கள் விழிப்புணர்வு செய்யுங்கள் !

இதுபோன்ற இயற்கை மருத்துவ பயனுள்ள பல தகவல்களை உடனுக்குடன் அறிந்திட எமது இயற்கை மருத்துவ பக்கங்களில் இணைந்திருங்கள்....

! மூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்!

! மூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்!


தொண்டை எரிச்சல்

எலுமிச்சம்பழச்சாறுடன் தேனும் சம அளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும்
துளசி சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து கலக்கி குடித்தால் சளி குறையும்.

பசும்பாலில் சிறிதளவு ஒமம் போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க சளி நீங்கும்.
இருமல்

1 கப் ஆப்பிள், 1 கப் எலுமிச்சைச் சாறு, 1 கப் இஞ்சி சாறு, 1 கப் வெள்ளபூடு இவற்றை எடுத்து ஒன்றாக கொதிக்க வைத்து பின்பு அது மாவு போல் ஆனவுடன் தனியாக எடுத்து அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து அதை காலை மற்றும் இரவு ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், பசி, ஜீரணம் மற்றும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும்
சளித் தொல்லை

ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை இவற்றில் சிறிதளவு எடுத்து லேசாக அரைத்து பின்பு அதை நன்றாக இட்லி அவிப்பது போல் அவித்து அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும் . 2 தேக்கரண்டி சாறு அதில் சம அளவு தேன் கலந்து தினமும் 1 பொழுது வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.

ஜலதோஷம்

திப்பிலி, கடுகு, சீரகம், சுக்கு மற்றும் மிளகு இவற்றில் சிறிதளவு எடுத்து அதனுடன் வேப்பங் கொழுந்தையும் சேர்த்து அரைத்து நிழலில் காயவைத்து பி்ன்பு அதை மாத்திரையாக்கி தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குணமாகும்.
ஜலதோஷம்

சீரகத்தை நன்றாக வருத்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.

மார்புச் சளி

ஏலக்காயை நன்கு பொடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தினமும் காலை மாலை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை நெய்யில் கலந்து சாப்பிடவும்.
தலை குளிர்ச்சி

காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும்.
3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.
மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.
பின்பு அதை வடிகட்டவும், வடிக்கட்டின சாரை.
3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.

மூக்கடைப்பு தீர‌

சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடவும்.

Wednesday, December 17, 2014

கர்ப்பிணிகளே! வாந்தி அடிக்கடி வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!

கர்ப்பிணிகளே! வாந்தி அடிக்கடி வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!


பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது, பெண்களுக்கு ஆரம்ப காலத்தில் அல்லது கர்ப்ப காலம் முழுவதும் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். ஏன் எந்த ஒரு உணவை சாப்பிட்டாலும், மயக்கம், சோர்வு, வாந்தி, குமட்டல் போன்ற உணவுகள் வரும். இதற்காக மருத்துவரிடம் சென்றாலும், பலனில்லை. அவர்களால் கூட இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. இவ்வாறு கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடும் அனைத்தும் வாந்தி எடுக்கும் போது வெளியே வந்தால், நிச்சயம் கர்ப்பிணிகள் மிகவும் வலுவிழந்து இருப்பார்கள். பின் குழந்தை பிறக்கும் போது பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

எனவே வாந்தியின் மூலம் உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் வெளியேறுவதை நிறுத்த, வாந்தி வருவதைத் தடுக்கும் ஒருசில இயற்கை வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் சரிசெய்யலாம். இப்போது வாந்தியை தடுக்கும் இயற்கை வைத்தியங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

* உலர் எலுமிச்சை: எலுமிச்சையை துண்டுகளாக நறுக்கி, அதனை குறைவான தீயில் சிறிது நேரம் வறுத்து, பின் அதனை சூரிய வெப்பத்தில் காய வைத்து, பின் அதனை அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் எலுமிச்சையை துண்டுகளாக்கி, வெயிலில் 3-4 நாட்கள் காய வைத்து, கொடி செய்து கொள்ளலாம். பின், அந்த பொடியை வாந்தி வரும் மாதிரி இருக்கும் போது, சூடான நீரில் போட்டு, குடிக்க வேண்டும். இந்த செயலை மயக்கம் வருவது போது இருந்தாலும், குடிக்கலாம்.

* இஞ்சி: இஞ்சியின் சிறிய துண்டை சாப்பிட்டாலும், வாந்தி வருவது போன்ற உணர்வு இருந்தாலும் தடுக்கலாம். வேண்டுமெனில் இஞ்சி டீ போட்டு குடித்தாலும், அதனை சரிசெய்யலாம். எனவே கர்ப்பிணிகள் வெளியே செல்லும் போது சிறு துண்டு இஞ்சியை கொண்டு செல்வது நல்லது

* எலுமிச்சை ஜூஸ்: இது ஒரு சிறந்த மற்றும் பிரபலமான ஒரு மருந்து. அதிலும் கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் வாந்தியை கட்டுப்படுத்த, ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் சிறப்பானதாக இருக்கும். குறிப்பாக வெதுவெதுப்பான நீரில் ஜூஸ் போட்டு குடிப்பது நல்ல பலனைத் தரும்.

* ஓமம்: வாந்தி வந்தாலோ அல்லது வருவது போன்ற உணர்வு இருந்தாலோ, அப்போது சிறிது ஓமத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், வாந்தி வருவதை தடுக்கலாம். அதுமட்டுமின்றி, இவ்வாறு செய்தால், மயக்க உணர்வும் போய்விடும்.

* மூலிகை டீ: ஒரு கப் மூலிகை டீ சாப்பிட்டாலும், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாந்தியை தடுக்கலாம். தற்போது நிறைய மூலிகை டீ உள்ளது. ஏன் இஞ்சியிலிருந்து, சீமைச்சாமந்தி டீ வரை எது வேண்டுமானாலும் குடிக்கலாம். இதனால் மயக்கம், குமட்டல், வாந்தி போன்றவற்றை குணப்படுத்தலாம்.

மேற்கூறியவையே வாந்தி வருவதைத் தடுக்கும் வீட்டு மருந்துகள். வேறு ஏதாவது வாந்தியை தடுக்கும் வீட்டு மருந்துகள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.http://naattumarunthu.blogspot.in/

Monday, December 15, 2014

கால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்

கால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்

பித்த வெடிப்பு நம்மில் அனேகம்பேருக்கு உள்ளது, குதிகாலின் பின்புறம் வெடிப்புகள் தோன்றும்.
• பித்த வெடிப்பு தோன்றமலிருக்க, காலை, மாலை இரு வேளையும் குளிக்கும் போது குதிகாலை நன்கு கல்லில் தேய்த்துக் குளித்து வந்தால், பித்த வெடிப்புகள் தோன்றாது.
• குதிகாலின் பின்புறம் அழுக்குச் சேர்ந்து, அவ்வழுக்கை அவ்வப்போது சரியாகச் சுத்தப்படுத்தாமலிருப்பதே, பித்த வெடிப்புகள் வரக்காரணம்.
• பித்த வெடிப்புகள் தோன்றிய பகுதிகளில் மாமரத்து பட்டையை வெட்டினால் பிசின் போன்று வரும் மாமரப் பாலை நாள்தோறும் தடவி வந்தால், பித்த வெடிப்புகள் மறையும்.
• விளாமர இலைக் கசாயம் அருந்தலாம். அரச மரத்தைக் குத்தி வரும் பாலை, பித்த வெடிப்புகளின் மீது தடவி வந்தால், பித்த வெடிப்புகள் மறைந்து விடும்.
• பீர்க்கங்காய் இலையுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் பித்த வெடிப்புகளில் தடவலாம். மாமரத்து இலைச் சாறும் தடவலாம்.
• கால் ஆணி குணமாக, செந்தூரக் கட்டியை எடுத்துக் கால் ஆணியில் தேய்த்து வந்தால் இரத்தம் வடியும்.
• இரத்தம் வடிவதைக் தடுக்க இரத்தம் வரும் பகுதியில் மஞ்சளை அரைத்துப் பூச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், கால் ஆணி குறைந்து விடும்.
• மருதோன்றி இலை, வசம்பு, மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்தரைத்துக் கால் ஆணி மேல் கட்டி வந்தால் கால் ஆணி குணமாகும்.
• கால் ஆணி உள்ள இடத்தில் அம்மான் பச்சரிசி மூலிகைப் பாலைத் தடவினால், கால் ஆணி குணமாகும். மயில் துத்தத்தை உரைத்துப் போட கால் ஆணி குணமாகும்.

கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க

கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க
*************************************************************************

பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி அவர்கலின் அழகை கெடுக்கிறது. இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான். ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.

இமைகளின் மேல் கலவையைப்பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும். பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை.

இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்ற விடும். இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.

கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க?

கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க?
************************************************************************

பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி அவர்களின் அழகை கெடுக்கிறது. இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான்.

தக்காளியை அரைத்து கருவளையத்தின் மேல்  பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உருளைகிழங்கு சாறின் மூலமும் கருவளையத்தை நீக்கலாம்.

இன்றைய பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தே கருவளைத்தை போக்கலாம்.

* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.

* எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.

* தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.

* சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

சிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்

சிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்
**********************************************************************
எமது நாட்டைச் சார்ந்த இலையுதிர் மரம் மாவிலங்கமாகும். இது ஆற்றங்கரை ஓரங்களில் அதிகமாக காணப்படும். இந்த மரத்தின் இலைகள் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலையாகும். மாவிலங்கத்தின் இலைகளும், பட்டையும் மருத்துவ பயன் கொண்டவை. 

கி.மு 8ம் நூற்றாண்டிலேயே ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளில் மாவிலங்கத்தின் மருத்துவ பயன்பாடு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி 1100ம் ஆண்டு முதல் சிறுநீரகக் கல் போக்க இந்திய மருத்துவத்தில் முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: 

இத்தாவரத்தில் சபோனின்கள், பிளேவனாய்டுகள், தாவரஸ்டீரால்கள் மற்றும் குளுக்கோசிலினேட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள் வருனால், ரூட்டின், சிட்டோஸ்டிரால், பெட்டுலினிக் அமிலம், குளுக்கோகப்பாரின், கெடா பிசைன் போன்றவை காணப்படுகின்றன. 

அலர்ஜிக்கு மருந்து 
மாவிலங்கப் பட்டை ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, மற்றும் தோல் வியாதிகளை குணப்படுத்தும். மேலும் காய்ச்சல் வயிற்று எரிச்சல், வாந்தி ஆகியவற்றினையும் போக்கும். மூட்டுக்களின் வீக்கம் மற்றும் புண் போக்க பசுமை இலைகள் உதவுகின்றன. கசக்கிய இலைகளை வினிகள் சேர்த்து பயன்படுத்துவர். 

முகவாதத்தை குணமாக்கும் 

குளிர்காலத்தில் பனிக்காற்று தாக்குவதினால் ஏராளமானோர் முகவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாவிலங்கம் அருமருந்தாகும். மாவிலங்கு மரப்பட்டை ,மூக்கிரட்டைப் பட்டை வேர், வெள்ளைச் சாரணை வேர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு இடித்து முதல் நாள் இரவில் 250 மில்லி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி அளவு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் 60மில்லி கிராம் `நண்டுகல் பற்பம்’ சேர்க்க வேண்டும். தினமும் பல் துலக்கியதும், இதை அருந்தி வர இரண்டு, மூன்று மாதங்களில் நிரந்தர குணம் ஏற்படும். சர்க்கரை நோயாளிகளை துன்புறுத்தும் பிரச்சினை `தோள்பட்டை உறைவு’. இந்த நோய்க்கான காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையையும் மாவிலங்கம், மூக்கிரட்டை, வெள்ளைச் சாரணை வேர், நண்டுகல் பற்பம் மூலம் இரண்டு மாதங்களில் குணப்படுத்த முடியும்.

 சிறுநீரக கற்களை வெளியேற்றும் சிறுநீரகக் கற்களை நீக்க மேலை நாடுகளிலும், இந்தியாவிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சிறுநீருடனேயே கல் வெளிவருவது போன்று உதவுகிறது. 

இன்றைய நவீன ஆய்வுகள் இதனை நிரூபித்துள்ளன. சிறுநீர்ப்பையில் வீக்கம், சிறுநீர்க்குழாய் அடைப்பு மற்றும் இனபெருக்க உறுப்புடனான சுரப்பியில் அதிக வளர்ச்சியினால் ஏற்படும் சிறுநீராக கோளாறுகளை குணப்படுத்துகிறது. 
பாரம்பரியமாக கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட தாவர மருந்தின் அதே பயன்பாடு அதே நோய்களுக்கு ஏற்றது என்று நிறுவப்பட்டதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மாவிலங்கம். 

ஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)

ஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)
**************************************************************************************

ரத்த சோகைக்கு தீர்வு நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ் செய்யும்.

எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு பருகினால் உடனடியாக சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும். பொதுவாக அஸ்கா சர்க்கரை உட்கொள்ளும்போது அதிலுள்ள சத்துப் பொருட்கள் உடனடியாக உடலில் சேர்ந்துவிடும். ஆனால் வெல்லம் சத்துக்களை உடலில் தேக்கி வைத்து தேவைப்ப்டும் போது தகுந்த பயனை அளிக்கும்.

சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள்.

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்.

ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது.

மூலிகைக் குடிநீர் ..!

மூலிகைக் குடிநீர் ..!
******************************

மூலிகைகள் கலந்த குடிநீர் மூலிகைக் குடிநீர் எனப்படுகிறது. சீரகத்துடன், ஆவாரம்பூ (Cassia auriculata), ஆடாதோடை (Justicia adhatoda) இலைகள், துளசி இலைகள், வல்லாரை இலைகள், கரிஞ்ஞாலி (Acacia catechu) வேர், மாம்பட்டை, நெல்லிக்காய்ப் பட்டை ஆகிய மூலிகைகளை சம அளவில் கலந்து பொடியாக நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. அதிலிருந்து தயாரிக்கப்படுவதே மூலிகைக் குடிநிர். வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும். அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர், போன்றவை அடங்கும்.

நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே.. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.

இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன.குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும்.

ஆவாரம்பூ குடிநீர்

“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”

என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

துளசி குடிநீர்

துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.

டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வல்லாரை குடிநீர்

எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.

இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.

காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.

இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

கரிசாலை குடிநீர்

“ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி”

என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.

வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.

கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!
*****************************************************************
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

முதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி!

முதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி!

***********************************************************************************

செய்முறை விளக்கம் - Siddha medicine


கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில்
கோலை ஊன்றி குறுகி நடப்பவனும்
கோலை வீசி குலாவி நடப்பானே ...

சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.

சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.

நிலம், நீர் ,நெருப்பு, காற்று, ஆகாயம், என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும், ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப்பதால் நடுவில் உள்ள நீர், நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்து கின்றனர். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.

வாதம் - காற்று - 1,மாத்திரை அளவு -
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு-
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு -

இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறையவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.

வாதம் - காற்று - 1, மாத்திரை அளவு --------- சுக்கு
பித்தம் - நெருப்பு - 1/2, மாத்திரை அளவு--------- இஞ்சி
கபம் - நீர் - 1/4, மாத்திரை அளவு -------- கடுக்காய்

இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,

சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் , கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.

சுக்கு சுத்தி ; தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும். பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும். பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் . இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.

கடுக்காய் சுத்தி ; கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.

இஞ்சி சுத்தி ; இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .

இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.

உண்ணும் முறை :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்) எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும்.

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இளகிப் போகும்.

இதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.

பழமொழி :

கடுக்கை உண்டால் மிடுக்காய் வாழலாம்.
ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு
மிஞ்சிய கடவுள் இல்லை.

அல்சர் அவதியா..? சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

அல்சர் அவதியா..? சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு! - 
**************************************************************************************

இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.
இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.

காரணங்கள்: அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

சேர்க்க வேண்டியவை:

கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.

தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.
கடைப்பிடிக்க வேண்டியவை:
காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.
பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.
தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

உயிர் போகின்ற முதுகு வலியா? எளிய உடற்பயிற்சிகள் நல்லது

உயிர் போகின்ற முதுகு வலியா? எளிய உடற்பயிற்சிகள் நல்லது


முதுகு வலி என்பது இன்றைக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தலையாய பிரச்சினையாக உள்ளது. இதற்கு காரணம் பள்ளி குழந்தைகள் பொதி சுமப்பதும், இளைய தலைமுறையினர் ஒரே இடத்தில் அமர்ந்து கம்யூட்டர் முன்பு வேலை பார்ப்பதும்தான் என்கின் றனர் மருத்துவர்கள். முதுகுவலிக்கான காரணங்கள் குறித்தும் அதற் கான தீர்வுகளையும் தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.

தண்டுவட நரம்புகள் பாதிப்பு

முதுகெலும்புகளுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பான நிலையில் உள்ள தண்டுவட நரம்புகள்தான் உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கடத்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்கின்றன. முதுகெலும்புகளுக்கு மத்தியில் உள்ள டிஸ்க் நகர்ந்து இந்த நரம்புகள் நசுக்கப்படும்போது தாங்க முடியாத வலி ஏற்படும்.

வேலை நிமித்தமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தே இருக்கக்கூடிய சூழல், தினமும் இரு சக்கர வாகனங்களில் நெடுந் தொலைவு பயணித்தல், உடல் எடை கூடுதல், கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்திருத்தல் போன்ற செய்கைகளால், உடல் தசைகள் பலவீனம் அடைவதோடு, முதுகெலும்புகளில் உள்ள 'டிஸ்க்’ அமைப்புகளிலும் அதீத அழுத்தமும் தேய்மானமும் ஏற்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த முதுகெலும்பு அமைப்பும் சீர்குலைவதோடு, தண்டுவட நரம்புகளும் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. தவிர, எலும்புகளில் ஏற்படும் சத்துக் குறைவுப் பாதிப்புகளாலும் முதுகு வலி ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வைட்டமின் டி சத்து

நகரச் சூழலில் இருப்பவர்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடப்பதால், உடலில் வெயில் படுவதே அபூர்வமாகிவிட்டது. வெயிலில் கிடைக்கும் 'வைட்டமின் டி’ எலும்புகளுக்குக் கிடைக்காமல் போவதாலும் எலும்புகள் மிருதுத்தன்மை அடைந்து எளிதில் தேய்மானமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, தினமும் அரை மணி நேர மாவது உடலில் வெயில் படும்படியாகச் சூழ்நிலைகளை மாற்றிக்கொள் வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

உடற்பயிற்சி அவசியம்

நாம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே நமது எலும்புகளுக்குத் தேவை யான கால்சியம் சத்து இருக்கிறது. கால்சியத்தை எலும்பு கிரகிக்கவும், முதுகு வலிக்கு முடிவு கட்டவும் ஒரே வழி உடற்பயிற்சிதான். உடற் பயிற்சி செய்யும்போதுதான், எலும்புகள் தங்களுக்குத் தேவையான கால்சியத்தை உறிஞ்சும். எனவே நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் போன்ற எலும்பு மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய ஏரோபிக்ஸ் (Aerobics Exercise) வகை உடற்பயிற்சிகள் நல்லது.
இவை தவிர, உடலின் வளைவுத்தன்மைக்கு உதவும் யோகாவும் எலும் பின் ஆரோக்கியத்தைக் காக்க வல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

வெள்ளைப்பூண்டு தைலம்
வெள்ளைப்பூண்டு தைலத்தை எடுத்து முதுகுவலி உள்ள இடத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். முதுகுவலி குணமாகும். வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து பருக முதுகுவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வைட்டமின் சி பற்றாக்குறை
வைட்டமின் சி பற்றாக்குறையினாலும் முதுகுவலி ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே அன்றாட உணவில் வைட்டமின் சி சத்துள்ள பொருட்களை சேர்த்துக்கொள்ளுமாறு உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒரே மாதிரி உட்காராதீங்க!
வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு துண்டை நனைத்து அதனை முதுகு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் முதுகுவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

அனைத்தையும் விட ஒரே பொசிசனில் அதிக நேரம் அமர்ந்திருக்க வேண்டாம். அவ்வப்போது எழுந்து நடந்தாலே முதுகுவலிக்கு காரணமான தசை அழுத்தம் ஏற்படாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Sunday, December 14, 2014

உடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.

உடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.

கொழுத்தவனுக்கு கொள்ளு… இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும்.
புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.
புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இரு வகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின் மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.
கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது.
உடல் எடையை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை : -
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
தக்காளி – 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
தாளிக்க
நல்லெண்ணெய் – சிறிது
கடுகு – சிறிது
வரமிளகாய் – 2
செய்முறை
மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம். கொ‌ள்ளு ரச‌ம்,கொ‌ள்ளு துவைய‌ல்,கொ‌ள்ளு குழ‌ம்பு,கொள்ளு சூப் ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.சளி காணாமல் போகும்

இருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்!

இருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்!


பூண்டுஇருமல், தொண்டை கரகரப்பு நீங்க!

பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

சளி நீங்க!
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

டான்சில் நீங்க!
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்

தலை முடி அடர்த்தியாக வளர!


தலை முடி அடர்த்தியாக வளர!

தலை முடி முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.
முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்!

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்!


இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர்.

போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது. இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும்.

பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.
இளநரை போக்க மூலிகை எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3
கறிவேப்பிலை – 2 இணுக்கு
கொத்தமல்லலி – சிறிதளவு
நெல்லி வற்றல் – 10 கிராம்
வெட்டிவேர் – 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆஸ்துமாவிற்கு மருந்தாகும் மிளகு!

ஆஸ்துமாவிற்கு மருந்தாகும் மிளகு!


ஆஸ்துமா நோயுற்றவர்களுக்கு மிளகு ஒரு அருமருந்தாக அமைகிறது.

மிளகு, கிராம்பு மற்றும் எருக்கம்பூ ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து மை போல அரைத்து, மிளகு அளவிற்கு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.
இதில் ஒரு மாத்திரை வீதம் இரு வேளை வெந்நீரில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இருமல், சளி, ஆகியவை குணமாகும்.
இதேபோல, ஆஸ்துமா நோயினால் மூச்சு விட சிரமப்படும்போது ஒரு பழுத்த வாழைப்பழத்தை அனலில் வேக வைத்து, மிளகுத்தூளில் தொட்டு உட்கொள்ள உரிய நிவாரணம் பெறலாம்.

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.

————————————————————–
இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.

இதோ கால அட்ட வணை:

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

இரவு 9 முதல் 11 வரை – உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

இரவு 11 முதல் 1 வரை – பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.

இரவு 1 முதல் 3 வரை – கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

மருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை :-

மருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை :-


வெற்றிலை பொதுவாக சீதத்தை நீக்கும் சக்தி கொண்டது. வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும். வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.
வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர 

மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும். குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.
வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும். கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது. சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.
குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும். வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும். விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.
வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள். நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும். சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.

Saturday, December 13, 2014

ஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி :

ஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி :-
+++++++++++++++++++++++++++++++++++++
காலத்துக்கு ஏத்த மாதிரி, இடத்துக்கு தகுந்த மாதிரி சில நோய் வந்து மனுஷன பாடாப்படுத்திரும்.
அதுலயும் சில நோய் இருக்குற இடம் தெரியாது. ஆனா… ஆளை உண்டு, இல்லைனு ஆக்கிடும்.
இந்த… கால் ஆணி இருக்கே, அது வந்துட்டா உயிர் போற மாதிரி வலி எடுக்கும். சிலர் என்ன வைத்தியம் செய்றதுனு தெரியாம பனைவெல்லத்தை கால்ஆணி உள்ள இடத்துல வச்சு தீக்குச்சியை பத்த வைப்பாங்க. இன்னுஞ்சிலர் பிளேட வச்சு ரத்தம்வர்ற அளவுக்கு ரவுண்ட் ரவுண்டா அறுத்து எடுப்பாங்க. எவ்வளவு கொடுமையானவைத்தியம் பாருங்க. கைவசம் எளிமையான வைத்தியமெல்லாம் இருக்கும் போது எதுக்காகஇந்த முரட்டு வைத்தியம்?
அம்மான் பச்சரிசி செடினு ஒண்ணு கேள்விப்பட்டிருப்பீங்க. அந்தச் செடியை உடைச்சு, அதுல வர்ற பாலை எடுத்து, கால் ஆணி இருக்கறஇடத்துல தடவி வந்தாஅந்தப் பிரச்னை ரொம்பச் சொகமா மறஞ்சி போயிரும்.
ஒரு செடியை சிறுசு சிறுசா உடைச்சு அதில வர்ற பாலை பயன்படுத் தலாம். ஒரு தடவை தடவினதும்குணம் கெடச்சிராது. தொடர்ந்து ரெண்டு வாரமாவது செஞ்சு பாருங்க. முதல்ல வலிகொறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைஞ்சிரும்.
மருதாணி இலை கொஞ்சம், மஞ்சத் துண்டு கொஞ்சம் ரெண்டையும் எடுத்து மையா அரைக்கணும். ஒரு நெல்லிக்காய் அளவுஎடுத்து, ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி உள்ள இடத்துல வச்சுகட்டிடணும். தொடர்ந்து 10 நாள் செஞ்சு பாருங்க. துண்டக் காணோம்… துணியைக் காணோம்னுபாய்ஞ்சி ஓடிப்போயிரும் ஆணி.
சித்திரமூலம் (இதை கொடிவேலி என்றும் சொல்வார்கள். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சு தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி மேல பூசி வந்தா மூணுநாள்ல குணம் கிடைக்கும். இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்துல புண்உண்டாகும். அப்படி வந்தா ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்சேர்த்து
குழைச்சு, புண் வந்த இடத்துல பூசுனா புண் ஆறிடும். கால் ஆணியும்காணாமப்போயிரும்.
கால் ஆணி நீங்க இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்தசுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணிநீங்கி விடும்.
5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ளஇடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து,துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்யவேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (24 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால்கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.
இதுபோன்ற இயற்கை மருத்துவ பயனுள்ள பல தகவல்களை உடனுக்குடன் அறிந்திட எமது இயற்கை மருத்துவ பக்கங்களில் இணைந்திருங்கள்..

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :

உலகின் மிகப் பழமையான மணமூட்டிகளில், அதிக செல்வாக்கு நிறைந்தவைகளுள் சீரகம் ரொம்ப முக்கியமானது. பார்க்கும் போது அவ்வளவு வசீகரம் இல்லாமல் கொஞ்சம் அழுக்காய், அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாய், உலர்வாய் இருக்கும் இந்த சீரகம். எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும்” என விடாதிருக்கும் விக்கலுக்கு, திகில் பயமெல்லாம் காட்ட வேண்டாம்! 8 திப்பிலியும் பத்து சீரகமும் பொடித்து தேனில் கலந்து கொடுத்தால் போதும் என்கிறது சித்த மருத்துவம்.

அடிக்கடி சீரணக் கோளாறு இருந்தால் இனி வீட்டில் சாதாரணத் தண்ணீருக்குப் பதில் உணவருந்துகையில் இளஞ்சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள். வீட்டில் குழந்தைகள் சாப்பிட மறுத்து அட்ம்பிடித்தால், சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் இவற்றை சமபங்கு எடுத்து நன்கு மையாகப் பொடி செய்து சம அளவு சர்க்கரை கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் முன்னர் 2 சிட்டிகை அளவு தேனில் குழைத்துக் கொடுக்க பசியை தூண்டும் இந்த ‘பஞ்ச தீபாக்கினி சூரணம்’.
“எப்போது சாப்பிடாலும் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் வயிறு ஆறு மாச கர்ப்பிணி வயிறு போல் வீங்கிக் கொள்கிறது; அப்படி ஒன்றும் அதிகமாக சாப்பிடவில்லை அளவாய்த்தான் சாப்பிட்டேன் ஆனாலும் வயிறு இப்படி ஆகிவிட்டது,” என வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமையான மருந்து. சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் 1/4 ஸ்பூன் அளவு சாப்பிட தீரும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும். சீரகத்தைக் கரும்புச்சாறிலும், எலுமிச்சைச்சாறிலும் இஞ்சிசாரிலும் ஒவ்வொன்றும் மூன்று நாளென, சுட்டெரிக்கும்படி வர இருக்கும் வெயில் காலத்தில் வைத்து எடுத்து அந்த சாறு ஊறிய பொடியை நன்கு மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த சீரகச் சூரணம், பித்த தலைவலி எனும் மைக்ரேனுக்கு அருமையான மருந்து.
சீரக கஷாயம்: சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும்.

http://naattumarunthu.blogspot.inhttp://naattumarunthu.blogspot.in/

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழிhttp://naattumarunthu.blogspot.in/ 

தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது, 

இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,

இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

தேவையான பொருள்கள் :
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

செய்முறை:

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.

இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.

ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.

தினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ

தினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ

அதியமானால் அவ்வைக்குக் கொடுக்கப்பட்டது’ என்ற சங்க காலக் கதைகள் முதல், 'நெல்லிக்காய் கலந்த கூந்தல் வளர்ச்சித் தைலம்’ என சமீபத்திய விளம்பரங்கள் வரை நெல்லிக்காயின் புகழுக்குக் குறைவே இல்லை. 

''தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டாக்டரைத் தேடிப் போவதும் ஆப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான். ஆப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும். ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்'' என்கிறார் சென்னை அரசு அண்ணா மருத்துவமனையின் சித்த மருத்துவரான கே.வீரபாபு.

''நெல்லிக்காயில் ஸ்பெஷல் என்று ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல முடியாது. நெல்லிக்காயே ஸ்பெஷல்தான்...'' என்கிறார் டயட்டீஷியன் ஹேமமாலினி. இருவரும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களில் இருந்து...

1.'காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்’ என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.

2.சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் 'திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.

3.கொதிக்கும் இந்த வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.

4.திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.

5.தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்கள் சாப்பிடும்போது வெறும் நெல்லிக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன் மூலம் அதில் இருக்கும் துவர்ப்புத் தெரியாது. நெல்லிக்காயைப் பெரும்பாலும் ஊறுகாயாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.

6.நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

7.தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

8.நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.

9.நெல்லிக்காயைத் துவையல் செய்தும் சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நெல்லிக்காய் உடன் துவையல் செய்து சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும். கொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லது.

10கீழாநெல்லி, கரிசலாங்கண்ணியுடன் நெல்லிக்காய் சேர்த்து செய்யும் மருந்து மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.