Saturday, March 9, 2019

கண்களை பராமரிக்க

கண்களை பராமரிக்க :

1.வாரத்திற்கு இரண்டு முறை கண் இமைகளில் பன்னீரை தடவி வந்தால் இமைகளில் உள்ள சுருக்கம் நீங்கும்.இமைகள் கருமை நிறத்துடன் அழகாக இருக்கும்

2.வெள்ளரிக்காயை வெட்டி கண்களில் வைத்துக்கொண்டால் கண்களுக்கு நல்ல குளிர்ச்சியும், ஒளியும் கிடைக்கும்.

3.இரவு படுக்கைக்கு செல்லும்போது கண்களில் இரண்டு சொட்டு விளக்கெண்ணையை விட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி பெற்று அழகு மிளிர காட்சி தரும்.

4.கண்களை அடிக்கடி குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும். ஈரதுணி கொண்டும் ஒற்றி எடுக்கலாம். கண்களை அதிகமாக பயன்படுத்தி தொடர்ந்து வேலை செய்யும் போது வேலையின் நடுவே சிறிது ஓய்வு எடுக்கலாம். கண்களை உள்ளங்கையில் பொத்திக்கொண்டு இருட்டில் கண்களை விழித்து பார்ப்பது, வைட்டமின் ‘ஏ’ சத்து உள்ள உணவுகளை உண்பது போன்றவை கண்களை பாதுகாக்கும் முறையாகும். கேரட்டை பச்சையாக சாப்பிட்டாலும் கண்களுக்கு நல்லது.

5.கேரட்டை வெட்டி, வெட்டப்பட்ட பகுதியால் கண்களின் புருவங்களில் தேய்த்து வந்தால் கண் புருவம் ஒழுங்காகவும், கருமையாகவும் வளரும்.

6.கண்களுக்கு மை தீட்டும் போது அடர்த்தியாக இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மூக்கின் மேல் பகுதியிலிருந்து கண்கள் சற்று தள்ளியிருந்தால் மைக் கோடுகள் மூக்கின் அருகே செல்லுமாறு இருக்க வேண்டும்.
புருவத்தில் இருந்து கண்கள் சற்று அதிகமாக கீழிறங்கியிருந்தால் புருவப்பகுதியில் மைக் கோட்டினை சற்று தடிப்பாக இழுக்க வேண்டும்.

7.கண்களில் கண்ணாடி அணியும் பெண்கள் மைக்கொடுகளை சற்று பட்டையாக அமைத்தால் மையிட்டிருப்பது பளிச்சென்று தெரியும்.

8.கண்களுக்கு மை தீட்டுவதற்கு முன்னர், கண்களை நன்றாக கழுவி முதல் நாள் இட்ட மைக் கறை போன்ற அழுக்குகளை அகற்ற வேண்டும். கண்களுக்கு மை இடும் போது குச்சிகளை பயன்படுத்தாமல் அதற்கென உள்ள மெல்லிய ரக பிரஷ்களை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இமைகளில் மை தீட்ட பிரஷ்களை தவிர வேறெதையும் பயன்படுத்த கூடாது.

No comments:

Post a Comment