Saturday, March 9, 2019

மாசிக்காயைக் கருகாமல் வறுத்துப் பொடியாக 1 கிராம் எடுத்து சிறிது தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட பெரும்பாடு, நீர்த்த கழிச்சல், இரத்த கழிச்சல், மிகு வியர்வை குணமாகும்

மாசிக்காயைக் கருகாமல் வறுத்துப் பொடியாக 1 கிராம் எடுத்து சிறிது தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட பெரும்பாடு, நீர்த்த கழிச்சல், இரத்த கழிச்சல், மிகு வியர்வை குணமாகும்.

மாசிக்காயை நீர் விட்டு இழைத்து ஆசன வாயில் தடவி வர அதிலுள்ள வெடிப்பு, புண் குணமாகும். தேமல், படைகளுக்குத் தடவி வர அவை குணமாகும்.

மாசிக்காயைப் பொடி செய்து நீரில் போட்டு காய்ச்சி வாய் கொப்பளிக்கப் பல் நோய் குணமாகும். பல் ஈறு பலப்படும்.

மாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 1 கரண்டி பொடியை அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வயிற்றுக் கடுப்பு, மந்தப் பெருங்கழிச்சல், நாள்பட்ட இருமல், கறும்புள்ளி, வெட்டை, காய்ச்சல் குணமாகும்.

மாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகையளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிட வயிற்றுப் போக்கு நிற்கும்.

மாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 2 சிட்டிகை அளவு எடுத்து சிறிது வெண்ணெயுடன் அல்லது 1 டம்ளர் பாலுடன் 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப் போக்கு குணமாகும்.

மாசிக்காய்களைச் சுட்டு அதன் சாம்பலை வெட்டுக் காயத்தின் மேல் வைத்து அழுத்த இரத்தம் உடனே நின்று விடும்.

மாசிக்காய்த் தூள் 20 கிராம், சாம்பிராணித் தூள் 25 கிராம், பன்றி நெய் 150 கிராம் சேர்த்துக் களிம்பு செய்து, 10 கிராம் அளவு எடுத்து சிறிது அபினுடன் கலந்து வெளிமூல (பவுத்திர) முளைக்குப் பூச குணமாகும்.

மாசிக்காய்த் தூள் 5 கிராம் 3 வேளை கொடுக்க மயில்துத்தம், மர உப்பு, பூ நீர் உப்பு, சுண்ணாம்புத் தண்ணீர், அபின், வாந்தி உப்பு இவற்றின் நஞ்சு முறியும்

No comments:

Post a Comment