Saturday, March 9, 2019

கருகருவென்று நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு? இதோ சில இயற்கையான டிப்ஸ்:

கருகருவென்று நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு? இதோ சில இயற்கையான டிப்ஸ்:

இன்றைய இளம் தலை முறையினரை வாட்டிவதைக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தலைமுடி உதிர்தல். தலைமுடி வயதான காலத்தில் கூட உதிராமல் அடர்த்தியாகவும் கருமையாகவும் இருக்க சில இயற்கை முறைகள்:

1) ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால், தலை முடி அடர்த்தியாக வளரும்.

2) செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி, அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு குளிக்க கூந்தல் அடர்த்தியாக வளரும்.

3) கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து, காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

4) மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.

5) வேப்பிலை, கொட்டையுடன் கூடிய 4 வேப்பம் பழத்தையும், வேப்பம் குச்சியையும் சேர்த்து சம அளவு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை தண்ணீரில் கலந்து தலையில் தேய்க்க வேண்டும். தேய்த்து பின்பு சிறிது நேரம் காயவிட்டு பிறகு நன்கு அலசுங்கள்.

இவ்வாறு வாரம் இருமுறை குளித்து வந்தால் தலையில் இருக்கும் ஈறுகள் மற்றும் பொடுகுகள் அழிவது மட்டுமின்றி தலை முடி கருகருவென்று வளரும். முடி உதிர்வு பிரச்சனையை போக்கும். இந்தப் பொடியை சீயக்காயுடன் சேர்த்தும் உபயோகிக்கலாம்."

திரிபலா சூரணம் நன்மைகள்

திரிபலா சூரணம் நன்மைகள்

நெல்லிக்கனி.நெல்லிக்கனியின் மருத்துவகுணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறுநெல்லி, பெருநெல்லி என்று இரண்டுவகை இருக்கிறது இதில் பெருநெல்லிதான் அதிக மருத்துவ குணம் கொண்டது. இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில்  கிடைப்பதில்லை.ஆனால் முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

நெல்லிக்கனி மூப்பை தடுக்கும் முறை

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக் கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். ஆண்டி-ஆக்ஸிடேன்ட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு. மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு,  அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் வைட்டமின் 'சி',உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ளன. 75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லி கிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும்,  இரும்புச் சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

நெல்லிக் கனியின் மருத்துவகுணங்கள்:

நெல்லிக்கனியின் சிறப்புகளை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது. ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின்-சி சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச்சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின்-சி சத்து உடலில் உள்ள இரும்புச்சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது. இதய வால்வுகளில், இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.
மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்-பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

கண்நோய்கள்தீர

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்தி வந்தால் கண்புரை நோய்,  கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

பல்வலி, ஈறு நோய்களுக்கு

தான்றிக்காய் பொடியினால் சிலந்திநஞ்சு, ஆண்குறிப்புண், வெள்ளை, குருதியழல் நோய் நீங்கும். பல்வலி தீரும். தான்றிப் பொடியைத் தேனில் கலந்து கொடுக்க அம்மை நோய் நீங்கும். தான்றிக்காய் பொடியினால் கண் ஒளி பெருகும். புண்பட்ட இடத்தில் இதன் பருப்பை உரைத்துப்பூச புண்ணாறும். இதன் கொட்டை நீக்கிக் கருகாமல் வறுத்துப் பொடித்து 1 கிராம் அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுக்க மலச்சிக்கல், குடல் பலமின்மை, காய்ச்சல், பித்தத் தலைவலி, இரத்தமூலம், சீதபேதி ஆகியவை தீரும். தான்றிப்பொடி 3 கிராமுடன் சமன் சர்க்கரை வெந்நீரில் கலந்து காலை, மாலை சாப்பிட பித்த நோய்கள், வாய்நீர் ஒழுகல் தீர்ந்து கண்பார்வை தெளிவுறும். தான்றிக்காய் தோலை வறுத்துப் பொடித்து தேனுடனோ சர்க்கரையுடனோ காலை மற்றும் மாலை சாப்பிட இரத்தமூலம் நிற்கும். தான்றிக்காய் தோலை சேகரித்து சூரணம் செய்து கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டி அளவு தேனில் கலந்து தினசரி சாப்பிட்டு வர அம்மை நோய்கள் தீரும். தான்றிக்காயைச் சுட்டு மேல் தோலை பொடித்து அதன் எடைக்குச் சமமாய் சர்க்கரை கலந்து தினம் காலையில் வெந்நீருடன் சாப்பிட்டு வர பல்வலி, ஈறுநோய்கள் போன்றவை குணமாகும்.

அடிபட்ட காயங்கள் புண்களை ஆற்ற

கடுக்காய் துவர்ப்புச் சுவை அதிகமாகவும், இனிப்பு, புளிப்பு, கார்ப்பு மற்றும் கசப்பு சுவைகள் குறைவாகவும் இயற்கையாகவே ஐம்பெரும்பூதங்களின் ஒருங்கிணைப்பாய்க் காணப்படும் கடுக்காயானது வாத, பித்த மற்றும் கப மாறுதல்களினால் ஏற்படும் அனைத்து நோய்களையும் தீர்க்கும். கடுக்காயில் கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய் மற்றும் பால்கடுக்காய் என்று நான்கு வகைகள் உண்டு. இவை நான்கும் உடலை அழிவிலிருந்து காக்கும் கற்ப மூலிகைகளாகக் கருதப்படுகின்றன. இமயமலைப் பகுதிகளில் தவத்திலிருக்கும் தவமுனிவர்கள் இவற்றைத் தேடி உண்பதாகக் கூறப்படுகிறது. தேவமருத்துவராகக் கருதப்பட்ட தன்வந்திரி பகவான் தம்மிடம் எப்போதும் கடுக்காய் வைத்திருந்தார். கொட்டை நீக்கியகடுக்காய் 10 கிராம் அளவு எடுத்து 2 குவளை தண்ணீரில் கொதிக்க வைத்து 1/2 குவளை அளவு சுருக்கி வடித்துச் சாப்பிடுவதால் அடிக்கடி நீர் பிரிவது கட்டுப்படும். புண்களைக் கழுவ புண்கள் ஆறும். வாயிலுள்ள புண்களுக்கு கொப்பளித்தால் ஆறும்.

கண் பார்வை தெளிவு பெறும்

முன் சொன்ன நெல்லிக்கனி, கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் முறைப்படி  கலந்த மருந்துக்கு திரிபலாசூரணம் என்றபெயர். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று மூலிகைப் பொருட்களை நன்றாகப் பொடித்து, திரிபலாசூரணம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூரணத்தை இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிட்டு அதற்குப் பிறகு பசும்பால் சாப்பிடுவது கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

சாப்பிடும் முறை

திரிபலா சூரணம் பயன்படுத்தும் முறை: மேற்சொன்னபடி நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை இரவு உணவு முடித்த பிறகு ½ மணி நேரம் கழித்து 1 டம்ளர் வெதுவெதுப்பான (Luke-Warm Water) நீரில் 1 டீஸ்பூன் அளவு (5 கிராம்) எடுத்து நன்றாக கலக்கி அருந்தவும்.

தீரும் நோய்கள்: ஒரே நாளில் மலச்சிக்கலும், மற்றும் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் மற்றும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு அவர்கள் சாப்பிட்டு வரும் மருந்துகளோடு துணை மருந்தாக சாப்பிட்டு வர சர்க்கரைநோய் தொடர்பான உடல் உபாதைகள் குறையும். நாம் சாப்பிடும் ஆங்கில மருந்துகளின் எதிர்விளைவுகளை (Side Effects) குறைக்க திரிபலா சூரணம் தினமும் சாப்பிட்டு வரலாம். திரிபலா சூரணம் தினம் சாப்பிட்டு வர நம் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நமக்கு வரும் பெரும்பாலான 100 க்கும் மேற்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.

இந்தச் சூரணத்தை முறைப்படி சாப்பிடுவதால் வாயுத்தொல்லை, உணவு செரிக்காத தொல்லை, மலச்சிக்கல், உடற்சூடு, மூல எரிச்சல், வயிற்றுப் புண், இரத்தக் குறைவு, வெண்குட்டம், கண் நரம்பு நலக்குறைவு ஆகிய நோய்கள் தீரும். சர்க்கரை நோய் தீரும். தொப்பை, உடல் எடை குறையும்.

நோய் தீர்க்கும் கீரைகள்

நோய் தீர்க்கும் கீரைகள்

பாலக்கீரை

பாலக்கீரையால் சிறுநீர்கடுப்பு, நீரடைப்பு, ருசியின்மை, வாந்தி, ஆகிய நோய்கள் நீங்கும் உடல் சூட்டை தணிக்க வல்லது. தண்ணீர் தாகத்தையும் நாவரட்சியையும் போக்கவல்லது அதிக சீதபேதி ஆகியவற்றைக் குணமாக்கும்.அமிலம் மிகுதியால் ஏற்படும் நெஞ்சுக் கரிப்பை நீக்கும் வயிற்றுபுண்ணை ஆற்றவல்லது. அல்சருக்கு சிறந்த மருந்தாகும்.

முடக்கத்தான் கீரை

காசம் சொறி சிரங்கு கரப்பான் போன்ற நோய்கள் குணமாகும். இடுப்பு பிடிப்பு, இடுப்பு குடைச்சல், கைகால் வலி, கை கால் குடைச்சல் முதலியனவற்றை குணமாக்கும் நரம்பு சம்பந்தமான நோய்களை நீக்கும் ஆற்றலை பெற்றது. இக்கீரை நரம்பு மற்றும் தசைநார்களுக்கு வலுவூட்ட வல்லது. மூலநோய்களுக்கு சிறந்த மருந்து.

அரைக்கீரை

பிரசவித்த பெண்களின் பிரசவித்த மெலிவை போக்கி உடலுக்கு சக்தியையும், பலத்தையும் கொடுக்கின்றன. இருமல், நுரையீரல் காய்ச்சல்களை போக்கும். நீர்க்கோர்வை, குளிர் காய்ச்சல், வாத காய்ச்சல், உடலில் தேங்கும் வாய்வு வாத நீர்களைப் போக்கும். பிடரி நரம்பு வலித்தல் நரம்பு வலி சன்னி தலைவலி ஆகியவற்றை குணப்படுத்தும்.

கரிசலாங்கண்ணி கீரை

கல்லீரல், மண்ணீரல் நுரையீரல், சிறுநீரகம், ஆகிய உறுப்புகளுக்கு நன்மை பயக்கிறது. இந்த உறுப்புகளில் தேங்கும் கழிவுகளை நீக்கி கெட்ட நீர்களை வெளியேற்றுகிறது. உடலில் கனத்தையும் பருமனையும் தொந்தியையும் கரைக்க விரும்புகிறவர்கள் இக்கீரையை நான்தோறும் பகல் உணவில் நான்கு வாரங்கள் தொடர்ந்து உண்டு வர பலன் கிடைக்கும்.

கருவேப்பிலை

இது உடலுக்கு பலம் உண்டாக்ககூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்தத்தை தணித்து உடல் சூட்டை ஆற்றும் குணம் உடையது. வயிற்றோட்டம் பித்தவாந்தி உணவு செரியாமை வயிற்று உளைச்சல் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.

பசலைக்கீரை

இக்கீரை நோய் தடுப்பு சக்தி உடையது. ரத்தத்தை உண்டாக்கும் நல்ல பலத்தை உடலுக்கு தரும். ரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் ஆற்றலுடையது. குறைந்த மற்றும் மிகுந்த அழுத்தமாயினும் இரண்டையும் சமன்படுத்தும் ஆற்றல் பெற்றது.

சிறுகீரை இக்கீரை உடலுக்கு வனப்பையும் அழகையும் தரும். வாதநோயை போக்கும் கல்லீரலுக்கு நன்மையைச் செய்யும். உடலில் தோன்றும் பித்த சம்பந்தமான நோய்களை இது கண்டுபிடிக்கும். விஷக்கடி முறிவாகப் பயன்படக்கூடியது.

சுக்கான் கீரை

வயிறு சம்பந்தபட்ட எல்லா நோய்களையும் கட்டுபடுத்தும். வாயுவுத் தொல்லைகளைப் போக்கும் சூட்டு இருமல் ஆஸ்துமா மூச்சுத் திணறல் ஆகியவற்றைக் கட்டுபடுத்தும் ஈரலுக்கு வலுவைத் தந்து பசியைத் தூண்டும் செரிமான ஆற்றலையும் பெருக்கச்செய்யும். நெஞ்செரிச்சல் கடும் பித்தம் முதலியவற்றை கண்டிக்கும். பித்தத்தினால் ஏற்படும் வாந்தியைக் குணப்படுத்தும் வயிற்றுச்சூட்டை தணித்து வயிற்றில் ஜிரணமாகாத பொருட்களை ஜீரணிக்கச் செய்கிறது.

தூதுவாளைக் கீரை

ஆஸ்தூமா நோயைக் குணப்படுத்தும் நிமோனியா, டைபாய்டு, சுபவாத சுரம் போன்ற நோய்களுக்கு இது மருந்தாகும். குளோரோமைசின் ஆன்டிபயாடிக்ஸ் போன்று மிக விரைவாகவும் வேகமாகவும் அபாயம் எதுவுமின்றி நோயாளியை பாதுகாக்கும். உடல்பலமும் முகவசீகரமும் அழகும் தரவல்லது.

பொன்னாங்கன்னி

இக்கீரையை உண்பதால் வாய்ப்புண், வாய்நாற்றம், மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள் நீங்கும். மூலச்சூடு கைகால் எரிச்சல் வயிற்றெறிச்சல் ஈரல் நோய் முதலியன நீங்கும். நல்ல பசியை உண்டாக்கும். கருவிழி நோய்கள் குணமாகும்.

மணத்தக்காளி கீரை

உடலுக்கும் அழகுக்கும் வசீகரத் தன்மையும் கொடுக்கும். இக்கீரை இதயத்திற்கு பலமும் வலிமையும் ஊட்ட வல்லது. குடல் புண்ணுக்கு ஏற்றதொரு மருந்து இது. உடம்பின் களைப்பை நீக்கி நல்ல தூக்கத்தை கொடுக்கவல்லது. தலைவலிக்கு சிறந்த மருந்து.

முருங்கைக் கீரை

நீரிழிவு வியாதியை நீக்கும் ஆற்றலுடையது. நெஞ்சில் உள்ள கோழையை அகற்றும் தன்மை பெற்றது. சிறுநீரை பெருக்கித் தள்ளும் ஆற்றல் கொண்டது. ரத்த விருத்திக்கு ஏற்றது. தொண்டை தொடர்பான நோய்களை நீக்கும்

வாயு தொல்லை நீங்க!!!

வாயு தொல்லை நீங்க!!!

சுக்கு - 50 கிராம்
மிளகு - 50 கிராம்
திப்பிலி - 50 கிராம்
இந்துப்பு - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்
கடுக்காய் - 50 கிராம்
பெருங்காயம் - 50 கிராம்
சாதிக்காய் - 50 கிராம்

இவை அனைத்தையும் முறைப்படி சுத்தி செய்து தனித் தனியாக மிக்ஸியில் போட்டு பொடி செய்து, பின் எல்லா பொடிகளையும் சேர்த்து நன்றாக கலந்து  கொள்ளவும்.

தேன், மோர், வெந்நீர் இதில் ஏதாவது ஒன்றுடன் கால் டீஸ்பூன்  அளவு கலந்து காலை, இரவு சாப்பிட்டு வர வாயு தொல்லை, விலா எலும்பு வலி, இடுப்பிலிருந்து மார்பு வரை வேதனை தரும் வாயு தொல்லை, மூச்சை அழுத்தி பிடிக்கும் நெஞ்சு வலி, முதலியவைகள் குணமாகும்.

தலையில் பொடுகு வந்துவிட்டதே என்ற கவலை இனி இல்லை....!

தலையில் பொடுகு வந்துவிட்டதே என்ற கவலை இனி இல்லை....!

பாசிப்பயறு மாவு, தயிர் கலந்து தலையில் ஊறவைத்துப் பின்னர்க் குளிக்க வேண்டும். கற்றாழைச் சாற்றைத் தலையின் மேல் பகுதியில் நன்கு படும்படி தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்துச் சில நிமிடங்கள் கழித்துச் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம். வேப்பிலைக் கொழுந்து, துளசி ஆகியவற்றை மையாக அரைத்துத் தலையில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.

துளசி, கருவேப்பிலையை அரைத்து எலுமிச்சை பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்துப் பிறகு குளிப்பது நல்லது. வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்க்க வேண்டும்.

நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர், கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்வது நல்லது.

பசலை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். அருகம்புல் சாறு எடுத்துத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் காய்ச்சிப் பின்பு ஆறவைத்துத் தலையில் தேய்க்கலாம்.

காய்ந்த வேப்பம்பூ 50 கிராம் எடுத்து, 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளஞ்சூடு பதத்துக்கு ஆறியதும், வேப்பம்பூவுடன் சேர்த்து எண்ணெயைத் தலையில் தேய்த்து 1/2 மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும்.

சின்னவெங்காயத்தைத் தோலுரித்துச் சுத்தம் செய்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து, அதை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், தலைச் சூடு குறைந்து குளிர்ச்சியடையும்

ஞாபக சக்தி விருத்திக்கு சூரணம்

ஞாபக சக்தி விருத்திக்கு சூரணம்

ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும்.இதன் வலிமைக்கு ஏற்பவே மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடைகின்றனர் என்பது உண்மை. ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில் வளம் பெறலாம்.

செய்முறை :

1 - வல்லாரை இலை - 70 -கிராம்
2 - துளசி இலை - 70 -கிராம்
3 - சுக்கு - 35 -கிராம்
4 - வசம்பு - 35 -கிராம்
5 - கரி மஞ்சள் -35 -கிராம்
6 - அதிமதுரம் -35 -கிராம்
7 - கோஷ்டம் - 35 -கிராம்
8 - ஓமம் - 35 -கிராம்
9 - திப்பிலி - 35 -கிராம்
10 - மர மஞ்சள் - 35 -கிராம்
11 - சீரகம் - 35 -கிராம்
12 - இந்துப்பு - 35 -கிராம்

இவைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்.

உண்ணும் முறை :

காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும். இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும். இதே போல் தினமும் உண்டு வர வேண்டும்.

ஒன்றிரண்டு மாதங்களில் மறதி, மந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக்தி பெருகும். மேலும் உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்,மூளையில் நோய்களே வராமல் காப்பாற்றும்

இதயம் வலுவாக ஆவாரை மூலிகைத் தேனீர்

இதயம் வலுவாக ஆவாரை மூலிகைத் தேனீர்:

ஆவாரம்பூ – 100 கிராம்

ரோஜாப்பூ – 50 கிராம்

சுக்கு – 25 கிராம்

மிளகு – 10 கிராம்

ஏலக்காய் – 10 கிராம்

துளசி – 50 கிராம்

இவற்றை ஒன்றிரண்டாய் இடித்து தூளாக்கி 1 spoon எடுத்து வைத்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு நீர் எடுத்து கொதிக்க வைத்து தேனீர் போல் தினசரி அதிகாலையில் சாப்பிட்டு வர இதயம் வலுவாகும். உடல் பருமன், ஊளைச்சதை குறையும்.