Wednesday, August 29, 2018

.இளநரை போக்க

இளநரை போக்க

1. வாரம் 2 முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

2. தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது.

3. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

4. முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

5. அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும்.

பல்வலி, சொத்தைப் பல் நீங்க சித்த மருத்துவம்

பல்வலி, சொத்தைப் பல் நீங்க சித்த மருத்துவம்


நோயாளியின் முறையீடு : பல்வலி, பல் ஈறு வீக்கம்

நோயின் அறிகுறிகள் : பல்வலி, ஈறு வீக்கம், பல் கூச்சம், பல் ஆட்டம், கடினமான பொருட்களை மெல்ல முடியாமை

நோய்க் குணங்கள் : பல் ஈறு வீக்கம், சொத்தைப் பல், பல்லடிச் சீழ்

நோய்க் கணிப்பு : பல்வலி, சொத்தைப்பல்

மருத்துவம்

1. வெந்நீரில் உப்பு போட்டு வாய்க் கொப்பளிக்கலாம்.
2. ஓரிரு கற்பூரவல்லி இலையையும் துளசியையும் நன்றாக மென்று, வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்திக்கொள்ளவும்.
3. கிராம்பை ஊறவைத்து அரைத்து இரண்டு துளி எடுத்து பஞ்சில் தோய்த்து, பல்வலி உள்ள இடத்தில் வைத்துக்கொள்ளவும்.
4. சுக்கு ஊறவைத்த நீரை சூடு செய்து வாய் கொப்பளிக்கச் செய்ய வேண்டும்.

தவிர்க்க வேண்டியன : குளிபானங்கள், ஐஸ்க்ரீம், இனிப்புப் பண்டங்கள்.

மருத்துவ அறிவுரைகள் : இருவேளை பல் துலக்கி, ஈறுகளை விரல் கொண்டு தேய்த்து விடவும். ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னும் வாய்க்கொப்பளித்தல், பல் துலக்கலுக்கும் ஆல், அரசு, வேல், மேம்பு போன்றவற்றின் குச்சிகளைப் பயன்படுத்தல்.

முடக்கு வாதம் தீர நொச்சி இலை

முடக்கு வாதம் தீர நொச்சி இலை


நொச்சி இலை (அரிந்தது) – 1 கைப்பிடி

தேங்காய் துருவல் – 1 மூடி

புழுங்கலரிசி மாவு – 100 கிராம்

பூண்டு – 10 பல்

இந்த நான்கு பொருள்களையும் ஒன்றாகக் கலந்து துணியில் புட்டு அவிப்பதுபோல் அவிக்க வேண்டும். பிறகு, அதில் பாதியை உள்ளுக்குச் சாப்பிடவும். மீதமுள்ளதை வைத்து வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால், மூன்றே நாளில் முடக்கு வாதம் நீங்கும்.

Friday, June 30, 2017

பழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்



1. மாதுளை - மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.

2. நாரத்தம் பழம் - நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும்.

3. முந்திரிப் பழம் - கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

4. கண்டங் கத்திரிப்பழம் - கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.

5. தூதுளம் பழம் - தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.

06. பலாப்பழம் - பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.

07. இலந்தைப் பழம் - பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

08. திராட்சை - உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.

09. பப்பாளிப் பழம் - யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

10. வாழைப்பழம் - மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.

11. வில்வப் பழம் - பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம் நன்கு செயல்படும்.

12. அரசம் பழம் - விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

13. சீமை அத்திப்பழம் - மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும். இரத்தச் சோகை விலகும்.

14. பேரீச்சம் பழம் - இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள். இரத்தச் சோகை விலகும்.

15. தர்பூசணிப் பழம் - கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.

16. முலாம் பழம் - மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

17. விளாம்பழம் - பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள் விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்.

18. அன்னாசிப் பழம் - குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச் சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச் சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டு வர, தொண்டைக்கட்டு நீங்கும்.

19. தக்காளி - இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி, மலச்சிக்கலையும் போக்கும்.

20. எலுமிச்சம்பழம் - எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2 நாளில் பேதி நின்றுவிடும்,

21. கமலா - இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத்தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.

22. கொய்யாப் பழம் - கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும்.

23. களாப் பழம் - களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து தலைக்கனம் குறையும்.

24. நறுவிலிப் பழம் - நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வர மலச்சிக்கல் அற்றுப் போகும்.

25. ஆல்பகோடாப் பழம் - காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும். அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும். காய்ச்சல் விலகும்.

http://naattumarunthu.blogspot.in/2017/06/blog-post.html

Saturday, April 8, 2017

எலும்புகளுக்குப் பலம் தரும் கறிவேப்பிலை!

எலும்புகளுக்குப் பலம் தரும் கறிவேப்பிலை!

சாப்பிடும்போது கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடுகிறீர்களா? அப்படியெனில், நீங்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளையும் சேர்த்தே தூக்கி எறிகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வைட்டமின் ஏ, பி1, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து உள்பட பல சத்துகள் கறிவேப்பிலையில் உள்ளன. அகத்திக்கீரைக்கு அடுத்தபடியாக கறிவேப்பிலையில்தான் சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ளது.

கறிவேப்பிலையைத் துவையலாகச் செய்து - கொட்டைப்பாக்கு அளவாவது - சாப்பிட்டு வந்தால் எலும்புகளும் பற்களும் உறுதியாவதோடு ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். உடலில் பலவீனம் ஏற்படுவது குறையும். கண், பல் தொடர்பான நோய்கள் குணமாவதோடு, வயதான காலத்திலும் பார்வைத்திறன் மங்காமல் பிரகாசமாகத் தெரியும். துவையல் செய்ய நேரமில்லை என்பவர்கள், வெறுமனே கறிவேப்பிலையை மென்றே சாப்பிடலாம். கறிவேப்பிலை ஜூஸ் செய்தும் அருந்தலாம். கறிவேப்பிலையுடன் கொத்தமல்லித்தழை, புதினா, இஞ்சி சேர்த்து அரைத்து, பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து வடிகட்டி, எலுமிச்சைச்சாறு கலந்தால் கறிவேப்பிலை ஜூஸ் ரெடி!

உடல் சூடு, அஜீரணம், வாய்வுக்கோளாறு காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருந்தால், கறிவேப்பிலையைச் சுத்தம் செய்து, அதில் நான்கில் ஒரு பங்கு சீரகம் சேர்த்து மையாக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவில் வாயில் போட்டு விழுங்கி வெந்நீரைக் குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

பன்றிக்காய்ச்சல், டெங்கு எனப் பல வடிவங்களில் காய்ச்சல் வந்து பயமுறுத்தும் இந்த நேரத்தில் சாதாரணக் காய்ச்சலோ, விஷக்காய்ச்சலோ - எது வந்தாலும் கறிவேப்பிலைச் சாறு நிவாரணம் தரும். ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையுடன் ஒரு டீஸ்பூன் சீரகம், அதில் பாதி மிளகு சேர்த்து அம்மி அல்லது மிக்ஸியில் வெந்நீர்விட்டு மையாக அரைக்க வேண்டும். அதை இரண்டு பாகமாகப் பிரித்து ஒரு பாகத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சிச்சாறு சேர்த்து அரை டேபிள்ஸ்பூன் தேன் கலந்து காலையில் சாப்பிட வேண்டும். மீதியுள்ள மருந்தை இதேபோல மாலையில் சாப்பிட வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சம் வெந்நீர் குடிக்கலாம். இதை மூன்று நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் முழுமையாகக் குணமாகும்.

மனநலப் பிரச்னை உள்ளவர்களுக்கு மையாக அரைத்த கறிவேப்பிலையுடன் பாதியளவு எலுமிச்சைப்பழத்தைச் சாறு பிழிந்து கலந்து, சாதத்துடன் சேர்த்துக் கொடுத்தால் பலன் கிடைக்கும். இதைப் பகல், இரவு எனச் சாப்பிட வேண்டியது அவசியம்.

கோடைக் காலத்தில் சிலருக்கு கண் இமைகளின்மேல் கட்டிகள் வரும். அப்போது, கறிவேப்பிலையை அரைத்துச் சாறு எடுத்து வெண்சங்கைச் சேர்த்து உரைத்து பற்றுப் போட்டு வந்தால், கட்டிகள் பழுத்து உடையும். கட்டிகள் உடைந்தபிறகும் தொடர்ந்து இதைச் செய்து வந்தால் புண்களும் ஆறிவிடும்.

Monday, April 3, 2017

கால் ஆணி மற்றும் பரு குணமாக

கால் ஆணி மற்றும் பரு குணமாக கால் ஆணி மற்றும்

பரு குணமாக. மயில் துத்தம் 10 கிராம் ஊமத்தை இலைச்சாறு 50 மில்லி தேங்காய் எண்ணெய் 100 மில்லி எடுத்து பக்குவமாக மணல் பருவத்தில் காய்ச்சி வடிகட்டி கண்ணாடிப் பாட்டிலில் பத்திரப்படுத்தவும். பயன்கள்:- கால் ஆணி உள்ளவர்களுக்கு கால் ஆணி உள்ள இடத்தில் புது பிளேடுனால் மேலாக அறுத்து இந்த தைலத்தை பஞ்சில் மூன்று சொட்டு விட்டுஅந்த இடத்தில் வைத்து பஞ்சு நகராமல் டேப்பினால் இரவில் ஒட்டி பகலில் எடுத்துவிட வேண்டும் . இவ்வாறு ஒரு வாரம் செய்தால் போதும். கால் ஆணி குணமாகும். ஒரு சிலருக்கு கழுத்து, மார்பு, முகம் முதலிய இடங்களில் மரு தோன்றி அசிங்கமாக இருக்கும். அதற்கு அந்த இடத்தில் இரவில் ஒரு சொட்டு வைத்தால் போதும். ஒருசில நாட்களில் வலி இல்லாமல் உதிர்ந்து விடும். ஆறாத புண்களுக்கு;- சர்க்கரை வியாதி புண்ணுக்கு புங்க மரத்துப் பட்டையினால் கசாயம் வைத்து புண்ணை கழுவி நன்கு துடைத்துவிட்டு இந்த தைலத்தை பஞ்சில் போட்டு காற்றோட்டமாக பேண்டேஜ் துணியினால் கட்டி வர விரைவில் புண் ஆறும். புண் பக்கத்தில் ஈ வராது

சிறப்புப் பஞ்ச கற்பம்

சிறப்புப் பஞ்ச கற்பம் பஞ்ச கற்பத்தைப் பற்றி பல வைத்தியர்கள் அளவு முறையில் மாற்றி பயன் படுத்தி வந்தாலும் சிததர்கள் அனைவரும் கடுக்காத்தோல், விதை நீக்கிய நெல்லி வத்தல், வெண்மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம் பருப்பு ஆகியவற்றை சம அளவாகப் பயன்படுத்தச் சொல்லி இருக்கின்றனர். அதிலும் போகமாமுனிவர் எழுதிய போகர் 7000, என்ற நூலில் பஞ்சகல்பத்தை இரவில் கரிசலாங்கண்ணிச் சாற்றில் ஊறவைத்து மறுநாள் காவையில் பசுவின் பால் விட்டரைத்து தேய்த்து வெந்நீரில் குளிக்கும் படி சொல்லி இருக்கிறார். இம்முறையில் 15 நாட்களுக்கொருமுறை குளித்து வரச் சொல்லியிருந்தாலும். நோய்களுக்குத் தக்கவாறு தோல்சம்பந்தப் பட்ட நோயாளிக்கு வாரத்தில் இரண்டு நாட்களும் எயிட்ஸ் நோயாளிக்கு தொடர்ந்து 48, நாட்களும் நோயில்லா மற்றவர்களுக்கு 15, நாட்களுக்கொருமுறையும் கொடுத்து வருகிறோம். இவ்வாறு தயாரித்து பயன்படுத்தும் பஞ்ச கல்பத்தினால் கபாலம் கெட்டியாகும். உரோமம் தும்பி போல் கருப்பாக வளரும் மழையில் நனைந்தாலும் குளிராது கண்பார்வை அதிகரிக்கும் உடம்பில் நச்சு நீர் வெளியேறும். ஞாபகசக்தி அதிகரிக்கும் நீண்ட நாட்கள் தலைவலி நீங்கிவிடும். சிறு வயதில் இருந்தே பயன் 15 நாட்களுக்கொரு முறைபயன் படுத்தி வந்தால் அவர்களக்கு 4448,வகையான நோய்கள் மற்றும் நரை திரை வராது என்றும் சித்தர்கள் நூல்களில் கூறப்பட்டுள்ளது. பாரம்பரிய வைத்தியங்களை கடைப்பிடித்து நோயின்றி வாழ்வோம்.