Friday, February 26, 2016

வாய்ப்புண். உதடுவெடிப்பு (ORAL ULCER)

1.கோவைக்காயில் சாம்பார்,கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு  குணமாகும்
2.சீரகத்தை சம அளவு நாட்டுசர்க்கரையுடன் பொடித்து காலைமாலை 1தேக்கரண்டி சாப்பிட உதடுவெடிப்பு,உதட்டுப்புண் குணமாகும்
3.தவசுமுருங்கை இலைகளை மென்று சாப்பிட வாய்ப்புண் குணமாகும்
4.கொப்பரைத்தேங்காயை துருவல் அரை கோப்பையுடன் அரை தேக்கரண்டி கசகசா சேர்த்தரைத்து துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்
5.திருநீற்றுப்பச்சை 4 இலைகளை மென்று சாறை விழுங்க வாய்ப்புண் குணமாகும்
6.1பிடி நெல்லியிலைகளை நன்கு கொதிக்கவைத்து இளம்சூட்டில் வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்
7.நெல்லிபட்டையை தூள் செய்து தேனில் குழைத்து வாய்ப்புண் மீது தடவ குணம் ஆகும்
8.மணத்தக்காளி இலைகளை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்
9.மணத்தக்காளியிலைகளை  மென்று சாறை  1நாளைக்கு 6முறை விழுங்கி வர வாய்ப்புண் குணமாகும்
10.மருதாணிஇலைகளை 1மணிநேரம் ஊறவைத்து காய்ச்சிய கஷாயத்தால் வாய்கொப்புளிக்க  வாய்வேக்காடு,வாய்ப்புண்,தொண்டைப்புண் ஆறும்
11.மாதுளம்பூச்சூரணம் அரைதேக்கரண்டி, 250மிலி நீரில் காய்ச்சி வாய்கொப்புளிக்க வாய்ப்புண், தொண்டைரணம், வலி  தீரும்.
12.அன்னபேதிச்செந்தூரம்200மிகி,,திரிபலாச்சூரணம்1-2கிராம்,5-10மிலி  தேனில் குழைத்து  தினமிருவேளை  சாப்பிட வாய்ப்புண்  ஆறும்.
13.நன்னாரி மணப்பாகு 5-10மிலி,தினமிருவேளை கொள்ள வாய்ப்புண்கள் ஆறும்
14.வெங்காரமது 3-5துளி வாய்ப்புண்களின்மீது  தடவிவர  குணமாகும்
15.மாசிக்காயை  இழைத்து வாய்ப்புண்களின் மீது தடவ குணமாகும்.
16.அகத்திக்கீரையை  கழுநீரில் வேகவைத்துக் குடிக்க வாய்ப்புண்கள் ஆறும்
17.வசம்பைச்  சுட்டு சாம்பலாக்கி,தாய்ப்பாலில் உரைத்து நாவில் தடவ, நாத்தடுமாற்றம்,வாய்நீரொழுகல்  குணமாகும். நன்கு பேச்சுண்டாகும்.
18.ஒதியம்பட்டைசூரணம் 1-2கிராம்,தினம்3வேளை,மோரில் உண்டு வர வாய்ப்புண்,குடற்புண்,பேதி,குருதிக்கழிச்சல்  தீரும்.
19.பச்சைபயரை முளைகட்டி காலையில் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும்
20..ஆவாரைபட்டையை பொடித்து கசாயமிட்டு வாய்கொப்புளிக்க வாய்ப்புண், வாய்துர்நாற்றம் நீங்கும்
21.சிவனார்வேம்பு வேரால் பல்துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம்,வாய்ப்புண் குணமாகும்
22.கொய்யாஇலைகளை மென்று பல்தேய்க்க பல்வலி,வாய்ப்புண் குணமாகும்
23.தான்றி தளிரிலைச் சாற்றினை வெள்ளைத் துணியில் தடவியுலர்த்தி, நீரில் பிழிந்து,வாய் கொப்புளிக்க   வாய்ப்புண்  குணமாகும்
24.அகத்திக்கீரை  கொழுந்தை வாய்கொண்டமட்டும் காலையில் மென்று தின்ன 3நாளில் வாய்வேக்காடு தீரும்
25.மருதாணி இலையை கியாழம்செய்து வாய் கொப்புளிக்க வாய் வேக்காடு நீங்கும்
26.மணித்தக்காளியிலையை சிறுபயர் போட்டு சமைத்துச்சாப்பிட வாய்வேக்காடு நீங்கும்
27.மல்லிகை இலையை வெற்றிலைபோல் மென்று துப்பிவர வாய்ப்புண் ஆறும்
28.அம்மான்பச்சரிசி இலையை சமைத்துண்ண  வறட்சி அகலும். வாய்,நாக்கு, உதடுவெடிப்பு,ரணம்  தீரும்.
29. ஆலம்பாலை காலைமாலை தடவிவர  வாய்ரணம், உதடு, நாக்குவெடிப்பு, கைகால் வெடிப்பு, பல்ஆட்டம் தீரும்.                                      30.ஒருபங்கு எலுமிச்சைசாறு,5பங்கு நீர் கலந்து வாய்கொப்புளிக்க வாய் வேக்காடு தீரும்.                                                                                                         31.திருநீற்றுப்பச்சிலையை வெறும் வயிற்றில் வாய் கொண்டமட்டும்  மென்று தின்ன வாய்வேக்காடு தீரும்.                                                                          32.உணவுக்குமுன் எலுமிச்சம்பழசாறு பருக அஜீரணம்,வாய்வேக்காடு தீரும்.  

No comments:

Post a Comment