Wednesday, February 22, 2017

பித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்!!!


பித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்!!!



பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக…

* நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தால் பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்திய நன்னாரிவேரை 3, 4 தடவை கூட பயன்படுத்தலாம்.

* பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலையை அரைத்து பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.

* தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

* தேங்காய் எண்ணெய் (200 மிலி), விளக்கெண்ணெய் (200 மிலி), கடையில் கிடைக்கும் வெண் குங்கிலியம் (35 கிராம்), சாம்பிராணிப்பொடி (10 கிராம்). தேன்மெழுகு (60 கிராம்). எண்ணெயை சூடு செய்து அதில் குங்கிலியம், சாம்பிராணி ஆகியப் பொடிகளை கலந்து, நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆறவைக்க களிம்பாகி இருக்கும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் இரவு படுக்கும் முன் தடவி வர பித்தவெடிப்பு உடன் தீரும்.

* கிளிஞ்சில் சுண்ணாம்புப் பொடி, விளக்கெண்ணெய் இவை இரண்டும் தேவையான அளவு கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் தடவிவர உடன் தீரும். விளக்கெண்ணெய் அதிகமாக சேர்க்காமல் பசையாகும் அளவு மட்டும் குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளை தடவிவர உடன் தீரும்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொர சொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

* பித்தவெடிப்பு இருப்பவர்கள், தண்ணீரை கை பொறுக்கும் அளவுக்கு சுட வைத்து, அதில் சிறிது நேரம் காலை வைத்து எடுத்தால், பாதங்கள் மிருது வாகும். கூடவே, வெடிப்பின் மூலமாக தேவையான நீர் உறிஞ்சப்பட்டு விடும். பாதத்தில் உள்ள அழுக்குகளும் வெளியேறிவிடும். இதை தினமும் செய்யலாம்.
பித்தவெடிப்பிலிருந்து ரத்தம் வந்தால், உடனடியாக தோல் மருத்துவரிடம் போய் சிகிச்சை பெறுவது அவசியம்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

* ஆலமரப்பால்,அரசமரப்பால் இரண்டும் சமஅளவு கலந்து பூசவும் வெங்காயத்தை வதக்கி பின்பு அதை அரைத்து பாதங்களில் தடவி வர பித்தவெடிப்பு குணமாகும் .

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.
* இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

* குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.⁠⁠⁠⁠

நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம்

நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் :
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, எளிதான மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.
அந்தவகையில், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பலவீனத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். திருநீற்றுப்பச்சை, தூதுவளை, வல்லாரை ஆகியவை நரம்புகளை பலப்படுத்தும் மூலிகைகளாக விளங்குகின்றன.
நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை பொறுத்துதான் உடலின் அனைத்து செயல்பாடும் இருக்கும். ஞாபக சக்தி, ஜீரண சக்தி, தூக்கம் போன்றவற்றுக்கு நரம்பு மண்டலம் உதவுகிறது. முதுகுத்தண்டில் அடிபடுதல், அழுத்தம் ஏற்படுவது, மன உளைச்சல், உடற்பயிற்சி இல்லாதது, மூச்சுப்பயிற்சி இல்லாமை, சத்தான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது போன்றவை நரம்பை பலவீனப்படுத்தும். இதனால், கை கால்களில் நடுக்கம், சோர்வு, மறதி, உள்ளங்கை கால்களில் வியர்வை போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

திருநீற்றுபச்சையை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்

. 10 திருநீற்று பச்சை இலைகளை சுத்தப்படுத்தி எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி சிறிது காய்ச்சிய பால் சேர்த்து, காலை வேளையில் குடித்துவர நரம்புகள் பலம் அடையும். சோர்ந்துபோன நரம்புகளை தூண்டுகிறது. உடல் சோர்வை போக்கும்.பல்வேறு நன்மைகளை கொண்ட திருநீற்று பச்சை மணத்தை தரக்கூடியது. நரம்புகளை பலப்படுத்தும் தன்மை உடையது. சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்தும்.

தூதுவளையை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தூதுவளை இலை, மஞ்சள் மற்றும் வெள்ளை கரிசாலை இலை ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்துவர நரம்புகளுக்கு பலம் ஏற்படும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். நுரையீரல், கல்லீரலை பலப்படுத்தும். நீலநிற பூக்களை உடைய தூதுவளை, நரம்புகளை தூண்டக்கூடிய மூலிகையாக விளங்குகிறது.

வல்லாரை கீரையை பசையாக அரைத்து, தேவையான நல்லெண்ணெய் விட்டு தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை வாரம் ஒருமுறை தலை, உடலில் பூசி குளித்துவர நரம்புகள் தூண்டப்படும். தலைவலி, கழுத்து வலி சரியாகும். உடல் சோர்வு போக்கும். மன சோர்வு நீங்கும்.நரம்பு பலவீனம் அடையும்போது உள் உறுப்புகள் அனைத்தும் பலவீனம் அடைகிறது. மூளை செயல்பாடு குறையும். ஞாபக மறதி, விரல்கள் மரத்துபோகுதல், தொடு உணர்வு குறைதல் ஏற்படுகிறது. நரம்புகளை பலப்படுத்துவதில் செம்பருத்தி, ரோஜா ஆகியவை அற்புதமான மருந்தாகிறது. காலிபிளவர், முளைகட்டிய தானியங்கள் ஆகியவையும் சிறந்த மருந்துகளாகின்றன. தினமும் அரைமணி புல் வெளியில் வெறும் காலோடு நடக்க வேண்டும். இதனால் நரம்பு மண்டலம் தூண்டப்படும். மூளைக்கு இதமான சூழல் ஏற்பட்டு ஞாபக சக்தி பலப்படும்.

வேணல் கட்டியை குணப்படுத்தும் மருத்துவத்தை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெங்காயம், மஞ்சள். சின்ன வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி நசுக்கி, மஞ்சள் சேர்த்து கலந்து கட்டிகள் மீது போட்டுவர நச்சுக்கள் வெளியேறி கட்டிகள் விரைவில் குணமாகும்.⁠⁠⁠⁠

Monday, February 20, 2017

கொழுப்பை குறைக்கும் கொடம் புளி

கொழுப்பை குறைக்கும் கொடம் புளி

கொடம் புளி – Garcina indica
கேரள மாநிலத்தில் பயன்படுத்தப் படும் புளி வகை இது..........
நாம் பயன்படுத்தும் புளி –Termarindus  indica

 1.குடற் புண்ணை உண்டாக்கும்
 2.வாதத்தை உண்டாக்கும்.

புளிப்பு சுவை விரும்பிகள் ,நாம் பயன்படுத்தும் புளிக்கு  பதில் கொடம் புளியை பயன்படுத்தலாம்.......
கொடம் புளியில்
   கால்சியம்
   பாஸ்பரஸ்
   இரும்பு
   தயமின்
   ரிபோப்ளவின் & நியாசின்
மற்றும் முக்கியப் கூறாக
   ஹைட்ரோசி சிட்ரிக் அமிலம் [ hydroxy citric acid ] உள்ளது.........
 இந்த HCA ,
 1.கொழுப்பை உண்டாக்கும் நொதியாம்  Citrate lyase ஐ தடுக்கிறது.......
 2. செரோடினின் ஹார்மோனை அதிகப்படுத்துகிறது ..இந்த ஹார்மோன் பசியை குறைக்கிறது......
யாரெல்லாம் பயன்படுத்த கூடாது
 1.கர்ப்பிணிகள்
 2. பத்து வயதிற்கு குறைவானவர்கள்.

மூட்டு வலி முழுமையான நிவாரணம் வேண்டுமா ?

மூட்டு வலி முழுமையான நிவாரணம் வேண்டுமா ?
இதை முயற்சி செய்து பாருங்கள்.

#முடக்கொத்தான் இலை ஒரு கைப்பிடி
#கொத்தமல்லி 50 கிராம்
#கரீஞ்சீரகம் 30கிராம்
#சுக்கு 10கிராம்
#சித்தரத்தை 10கிராம்
#மிளகு 10 கிராம்
#கொடம்புளி இரண்டு துண்டுகள்
#பெருங்காயம் சிறிதளவு
#பூனைக்காலி விதை பத்து
எல்லாவற்றையும் நன்றாக தட்டி ஒரு பானையிலிட்டு 8 டம்லர் நீர்விட்டு  பாதியாக வற்றவைத்து
காலை மாலை விதம்  ஒரு டம்ளர் சாப்பிட்டுவர இளந்த சக்திகள திரும்ப பெற்று கை கால் அசதி,மூட்டுவலி,உடல் பலவினம்,பாலியல் பலவினம்,உடல்நடுக்கம் போன்றைவை  குணமாகி வலிமையும் இளமையும் உண்டாகும்....

இந்த பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

நெஞ்சு சளி நீங்க துளசிச் சாறு ஓர் அருமருந்து

நெஞ்சு சளி நீங்க துளசிச் சாறு ஓர் அருமருந்து

தினமும் துளசிச் சாரை பருகினால் நெஞ்சு சளி கரையும்.



நெஞ்சு சளி நீங்க நெல்லிக்காய், மிளகு , தேன் மருந்து

நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்.



நெஞ்சு சளி நீங்க புதினா, மிளகு மருந்து

புதினா இலை (ஒரு கைப்பிடி) மிளகு(3) இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.



நெஞ்சு சளி குணமாக வெற்றிலை மருந்து

வெற்றிலைச் சாற்றில் இரண்டு சொட்டுக்களை காதில் விட்டால் சளி ஒழுகுவது நிற்கும்.



நெஞ்சு சளி குணமாக வெற்றிலை, இஞ்சி மருந்து

வெற்றிலைச் சாறு, இஞ்சிச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து குடித்தால் மார்பு சளி, சுவாசக் கோளாறுகள் குணமாகும்.



நெஞ்சு சளி குணமாக பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை மருந்து

பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை வைத்து துவையல் செய்து சுடுசோற்றில் நெய்யிட்டு உண்ண மார்பு சளி நீங்கும்.

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்

சில உணவுப்பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் நல பாதிப்புகளை உருவாக்கும். எந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால் என்ன பிரச்சனை வரும் என்று பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்
சில உணவுப்பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் நல பாதிப்புகளை உருவாக்கும். எந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால் என்ன பிரச்சனை வரும் என்று பார்க்கலாம்.

சோடா :
சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

தக்காளி :
தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

மாத்திரைகள் :
எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

ஆல்கஹால் :
பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

காரமான உணவுகள் :
காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

காபி :
காபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்மால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

டீ :
காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

தயிர் :
தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும். R.Athi, 8122048418

குளியல் பொடி தயாரிப்பது எப்படி?

குளியல் பொடி தயாரிப்பது எப்படி?

அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளனர். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை.

இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.

உலர்ந்த மகிழம் பூ பொடி 200 கிராம்

கிச்சிலி கிழங்கு பொடி 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி 100 கிராம்
கோரை கிழங்கு பொடி 100 கிராம்
உலர்ந்த சந்தனத் தூள் 150 கிராம்

இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும். இந்த மருத்துவ முறையை வராகமித்ரர் அங்கரசனைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.

குளியல் பொடி:

இப்போது பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

குளியல்பொடி தயாரிப்பது எப்படி?
மூலிகை பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்
வெட்டி வேர் 200 கிராம்
அகில் கட்டை 200 கிராம்
சந்தனத் தூள் 300 கிராம்
கார்போக அரிசி 200 கிராம்
தும்மராஷ்டம் 200 கிராம்
விலாமிச்சை 200 கிராம்
கோரைக்கிழங்கு 200 கிராம்
கோஷ்டம் 200 கிராம்
ஏலரிசி 200 கிராம்
பாசிப்பயறு 500 கிராம்

இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும். இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.