Thursday, June 3, 2021

சர்க்கரை நோய் குணமாக கீரைகள்…!


சர்க்கரை நோய் குணமாக கீரைகள்…!

1. முள்ளங்கிக் கீரைச் சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அதிகாலை மற்றும் மாலை இருவேளையும் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.

2. கறிவேப்பிலையை உலர்த்தித் தூளாக்கி தினமும் அதிகாலையில் 1 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

3. வெந்தயக் கீரையை அரைத்து, அதில் மாதுளை ஓடு, வில்வ ஓடு இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கலந்து காயவைத்துப் பொடியாக்கித் தினமும் அதிகாலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் நல்ல உடல் வலிமை உண்டாகும். சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

4. வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் அதிகாலை மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

5. பொடுதலைக் கீரையை வெந்தயம் சேர்த்துக் கஷாயமாக்கி அதிகாலை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு இதய வால்வுகளைப் பாதுகாக்கும் வேர்க்கடலை சாப்பிடுங்கள்.!


ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு இதய வால்வுகளைப் பாதுகாக்கும் வேர்க்கடலை சாப்பிடுங்கள்.!

வேர்க்கடலைக்கு ஆயுட்காலத்தையே நீட்டிக்கும் ஆற்றல் உடையது. இதில் நல்ல கொழுப்புகள் உள்ளதால், உடலுக்கு தீங்கு விளைவிக்காது. இதிலுள்ள வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

இதனை சாப்பிட்டால் மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இது கர்ப்பிணிகள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க உதவுகிறது. நியாசின்’-நிலக்கடலையில் அதிகமாக உள்ளதால், நினைவாற்றல் அதிகரிக்கிறது. பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படவும், கட்டிகள், நீர்க்கட்டிகள் வராது தடுக்கும் வல்லமை இதற்குண்டு.

இது ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு, இதய வால்வுகளைப் பாதுகாப்பதோடு, இதய நோய் வராமல் தடுக்கிறது. நிலக்கடலையில் உள்ள ‘பீட்டா கௌமரிக்’ என்ற அமிலம் குடலில் நச்சுப் பொருள் சேருவதைத் தடுக்கிறது. இதனால் குடல் புற்றுநோய் வருவதும்
தடுக்கப்படுகிறது.

விட்டமின் ‘பி’ சத்து சார்ந்த ‘பயோட்டின்’ என்னும் வேதிப்பொருள் முடி வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது; முடி உதிர்வதையும் தடுக்கிறது. இதனை வேக வைத்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்தால், ஊட்டச்சத்து அதிகரித்து, சீரான வளர்ச்சி கிடைக்கும். மூளையும் சிறப்பாக செயல்படும்.

இரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய பீர்க்கங்காய்..!


இரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய பீர்க்கங்காய்..!

பிஞ்சு பீர்க்கங்காயை விட முற்றிய பீர்க்கங்காயே சமையலுக்கு சிறந்தது. பிஞ்சு பீர்க்கங்காயை சமைத்து உண்டால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம், சளி பிரச்சனைகள் போன்றவை தோன்றும். 100 கிராம் பீர்க்கங்காயில் புரதம் 0.5%, கால்சியம் 40 மி.கி, பாஸ்பரஸ் 40 மி. கி, இரும்புச் சத்து 1.6 மி.கி, வைட்டமின் ‘ஏ’ 56%, ரிஃபோபிளவின் 0.01 மி.கி, தயாமின் 0.07 மி. கி, நிகோடின் அமிலம் 0.2 மி.கி, வைட்டமின் 5 மி.கி உள்ளது.

பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’, மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பீர்க்கங்காயைச் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும். பீர்க்கங்காய் நீரிழிவு நோயாளிகளுக்கும், சற்று பருமனான உடல் வாகு கொண்டவர்களுக்கும் ஏற்ற காய்கறியாகும். இதில் நார்ச்சத்தும் மாவுச்சத்தும் இருப்பதால் எளிதில் இரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடியது.

பீர்க்கங்காயை அளவோடு எடுத்து கொண்டால் நல்லது. அளவு அதிகமானால் பித்தம், சீதளம் போன்றவை ஏற்படும். பீர்க்கங்காயில் எல்லா விதமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் இருப்பதால், தொற்றுக் நோய் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் பாகற்காய்க்கு பதில் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும். சொறி, சிரங்கு, புண், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பீர்க்கங்காய் இலைச் சாற்றைத் தடவினால் நிவாரணம் கிடைக்கும். கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் மேம்படவும் பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, வயிற்றில் புண்கள் வராமல் காக்கும்.

இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய இயற்கை உணவுகள்.


இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க எவற்றை எல்லாம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.!

ஆரோக்கியமாக வாழ வெள்ளையணுக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெள்ளையணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி செய்யப்படுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஆதரவளித்து, பாக்டீரியாக்கள் மற்றும் இதர நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவது தான் இரத்த வெள்ளையணுக்களின் முக்கிய பணி.

ஒருவரது உடலில் இரத்த வெள்ளையணுக்களானது ஒரு மைக்ரோலிட்டர் இரத்தத்தில் சராசரியாக 4,500 முதல் 10,000 வரை இருக்கும். எப்போது இந்த அளவுக்கு குறைவாக இரத்த வெள்ளையணுக்கள் உள்ளதோ, அப்போது உடல்நல குறைவால் அடிக்கடி பாதிக்கப்படக்கூடும். ஒருவர் அடிக்கடி நோய்வாய்ப்பட நேர்ந்தால், உடலின் இரத்த வெள்ளையணுக்களின் அளவை பரிசோதித்து பார்ப்பது நலம். இந்த பதிவில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்று பார்ப்போம்.

சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்த ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, கிரேப்ஃபுரூட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள். இதனால் இரத்த வெள்ளையணுக்களின் அளவு அதிகரிக்கும்.

பசலைக்கீரையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதுடன், ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன்களும் அடங்கியுள்ளது. இது கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களின் அளவை அதிகரிக்கும்.

பாதாமை ஒருவர் தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், இரத்த வெள்ளையணுக்களின் அளவு அதிகரித்து, உடலைத் தாக்கும் நோய்களின் தாக்கம் குறையும். க்ரீன் டீயில் உள்ள அமினோ அமிலம் எல்-தியனைன், கிருமிகளை எதிர்த்துப் போராடும் வெள்ளையணுக்களின் உற்பத்திக்கு உதவும்.

பப்பாளியில் பொட்டாசியம், பி வைட்டமின்கள், ஃபோலேட் போன்ற ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்களும் உள்ளது. பப்பாளியைப் போன்றே கிவி பழத்தில் ஏராளமான அளவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி போன்றவைகள் உள்ளது. இந்த வைட்டமின் சி கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களின் அளவை மேம்படுத்துவதோடு, உடலின் முறையான செயல்பாட்டிற்கும் உதவும்.

Wednesday, June 2, 2021

உடற்பயிற்சியை முடித்துவிட்டு நீங்கள் சாப்பிட வேண்டிய உணவு இது தான்!!!


உடற்பயிற்சியை முடித்துவிட்டு நீங்கள் சாப்பிட வேண்டிய உணவு இது தான்!!!

உடல் ரீதியான செயல்பாடு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு முக்கிய அம்சமாக இருந்தாலும், ஒருவர் நாள் முழுவதும் சாப்பிடுவதைப் பற்றியும், குறிப்பாக ஒரு பயிற்சிக்குப் பிறகு சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் கடுமையான உடற்பயிற்சி அமர்வுக்குப் பிறகு என்ன சாப்பிட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், ஆரோக்கியமான விருப்பங்களைத் தேடுகிறீர்களானால், இந்த பதிவு உங்களுக்கு தான். நாம் பார்க்க போகும் ரெசிபி 300 கலோரிகளுக்கும் குறைவானது. மேலும் இது சூப்பர் எளிதானது மற்றும் இதனை செய்வதற்கு  ஆடம்பரமான பொருட்கள் எதுவும் தேவையில்லை.   

தேவையான பொருட்கள்:  

60 கிராம்- பாசிப்பருப்பு 

2- பச்சை மிளகாய் 

ஒரு துண்டு- இஞ்சி 

தேவையான அளவு- உப்பு சிறிதளவு கொத்தமல்லி 

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு ஊறிய பின் அதனை கொரகொரப்பான பேஸ்டாக  அரைக்கவும். 

*நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து அரைத்த பாசிப்பருப்போடு கலக்கவும். 

* தோசை கல்லை அடுப்பில் வைத்து நாம் தயார் செய்து வைத்த மாவை பரப்பி, இருபுறமும் சமைக்கவும். 

* தயிர், மிளகாய் தூள் மற்றும் கருப்பு உப்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட சாஸுடன் இதனை சாப்பிட்டு  மகிழுங்கள். 

குறட்டை பிரச்சனையை தீர்க்கும் தும்பை இலை சூரணம்.


குறட்டை பிரச்சனையை தீர்க்கும் தும்பை இலை சூரணம்

தேவையான மூலப்பொருட்கள்

தும்பை இலை - 50 கிராம்
அதிமதுரம் இலை - 10 கிராம்
திப்பிலி - 10 கிராம்
சுக்கு - 10 கிராம்
சீரக  - 10 கிராம்
பசும் பால்  - 100 மி

செய்முறை

முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

👉பிறகு தும்பை இலை,அதிமதுரம் இலை மற்றும் திப்பிலி ஆகிய பொருட்களை வெயிலில் நன்றாக காய வைத்து கொள்ள வேண்டும்.

👉பிறகு இந்த பொருட்களை தனி தனியே இடித்து நன்றாக அரைத்து மேல குறிப்பிடப்பட்ட அளவுகளில் சூரணம் போல மாற்றி எடுத்துக்கொள்ள வேண்டும்.

👉இவ்வாறு கிடைத்த சூரணம் பொருட்களுடன் சுக்கு தூள் மற்றும் சீரக தூள் சேர்த்து நன்கு பிசைந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.

மேலும் இந்த பொடியே அரைதேக்கண்டி எடுத்து 50 மி.லி பசும் பாலுடன் சேர்த்துக்கொண்டு தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் குறட்டை பிரச்சனையை முற்றிலுமாக தீர்த்து விடலாம்.

கழுத்து வலி பிரச்சனைகளை போக்கும் அற்புத குறிப்புகள்.


கழுத்து வலி பிரச்சனைகளை போக்கும் அற்புத குறிப்புகள்.:

கழுத்து வலியை சாதாரண வலி என்று நினைத்து விட்டாலோ அல்லது வெறும் வலி நிவாரணிகள் எடுத்தாலோ நிச்சயம் கழுத்து வலி தொடர்ந்து பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

ஐஸ் கட்டியை எடுத்து ஒரு துண்டில் சுற்றி வலி இருக்கும் இடத்தில் அந்த துண்டை வைத்து ஒத்தி எடுக்கவும். 2 நிமிடம் தொடர்ந்து இதனை செய்யதால் கழுத்து வலி குணமாகும்.

கழுத்து வலியை குணமாக்கும்! சில முக்கிய குறிப்புகள்!.. 
நொச்சி இலையை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளியுங்கள்.

இரவு வேளையில் கண்டதிப்பிலியை இடித்து பால், நீர் சேர்த்து வேக வைத்து பனங்கற்பண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் கழுத்துவலி காணாமல் போகும்.

கழுத்து வலியை போக்க உடற்பயிற்சி ஒரு சிறந்த தீர்வாகும். காய் கால்களை நீட்டி செய்யும் பயிற்சிகள் கழுத்து பகுதியை நெகிழ்வுத்தன்மையோடு வைக்க உதவும். இதனால் கழுத்து பகுதி வலிமை அடையும்.

தலையை முன்னும் பின்னும் சில நிமிடங்கள் தொடர்ந்து அசைக்கவும். பிறகு இரண்டு பக்கமும் மாறி மாறி தலையை திருப்பவும். 20 முறை தொடர்ந்து இந்த பயிற்சியை மேற்கொள்ளவும். சிறிது நேரத்தில் உங்கள் கழுத்து வலி பறந்து விடும்.

எந்த வலியையும் குணமாக்க அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறை பயன்படுத்தப்படுகிறது அக்குபஞ்சர் செய்வதால் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்பட்டு வலிகள்  குறைகிறது.

கழுத்து வலியை குணமாக்கும்! சில ஒரு டிஷ்யூ பேப்பரை வினிகரில் முக்கி எடுத்து கழுத்தில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து அதனை எடுத்து விடலாம். ஒரு நாளில் 2 முறை இதனை செய்து கழுத்து வலியில் இருந்து விடுதலை அடையலாம்.